டிரெண்டிங்கான ‘கெட்அவுட் ரவி’ ஹேஷ்டேக்
சென்னை,பிப்.4- நீண்ட காலமாக கிடப்பில் போட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.ஆளுநரின் இச்செயல் தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநரை வெளியேறச் சொல்லும் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் சமூகவலைத்தளத்தில் அகில இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது. தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டங்கள் தொடங்கி யுள்ளன. அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பினரும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.