ஜெர்மனி : புதிய “டிராபிக் லைட்” கூட்டணி மெர்கெல் காலம் முடிவுக்கு வருகிறது
பெர்லின், நவ.26- ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக் காத நிலையில், புதிய கூட்டணி உரு வாக்கப்பட்டுள்ளதாக பெரிய எதிர்க் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே பல கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பெரும்பா லான கட்சிகள் ஒரு முடிவில் தெளி வாக இருந்தன. தொடர்ந்து ஆட்சி யில் இருந்து வந்த கிறித்தவ ஜன நாயக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே அதுவாகும். அதனால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அந்தக்கட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை யைத் தேடி வந்தார்கள். தேர்தலுக்கு முன்பே, பொறுப்பு களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஏஞ்சலா மெர்கெல் அறிவித்தி ருந்தார். 16 ஆண்டுகள் ஆட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த அவர், தேர்தலுக்குப் பிறகும் தனது கட்சி வெற்றி பெற்று விட்டால், தனது செல்வாக்கு தொடரும் என்று கருதி வந்தார். ஆனால், பிற சிறிய கட்சிக ளை அழைத்துக் கொண்டால் தங்க ளால் பெரும்பான்மையைக் காட்டி விட முடியும் என்று சமூக ஜனநா யகக் கட்சி கருதியதால், அது நிறை வேறாத சூழல் உருவாகியுள்ளது.
தங்கள் கூட்டணிக்கு டிராபிக் லைட் கூட்டணி என்று பெயரிட்டுள்ள னர். பெரிய கட்சியான சமூக ஜனநாய கக் கட்சியை சிவப்பு குறிப்பதாக வும், இடையிலுள்ள ஆரஞ்சு நிறம் தாராளவாதம் பேசும் சிறிய ஜன நாயக்கட்சியைக் குறிப்பதாகவும், பசுமைக் கட்சியினரை பச்சை நிறம் குறிப்பதாகவும் கூறியுள்ளனர். மெர்கெலுக்குப் பிறகு, தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஓலப் ஸ்கோல்ஸ், “ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனியின் பொருளாதாரக் கட்டமைப்புகள் நவீனமயப்படுத் தப்படும். பசுமை சார்ந்த பொருளாதா ரமாகவும் அது இருக்கும்” என்று குறிப்பிடுகிறார். கடுமையான சூழலில் புதிய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்கிறார் கள். பிரக்ஸிட், நேட்டோ, உள்நாட்டுப் பொருளாதாரம், ஐரோப்பாவின் தலைமைப் பொறுப்பு என்று பல்வேறு முக்கியமான செயல் பாடுகளில் புதிய ஆட்சி முடிவெ டுக்க வேண்டியுள்ளது. உடனிருக்கப் போகும் சிறிய ஜனநாயகக்கட்சி நாட்டின் பழமைவாதிகளுக்கு நெருக் கமான கட்சியாகும். அதையும் சமூக ஜனநாயகக் கட்சி சமாளிக்க வேண்டியுள்ளது.