ஜெய்பீம் திரைப்படம் சிறப்புக் காட்சி

இரா. நல்லகண்ணு மற்றும் தோழர்கள் பார்வையிட்டனர்
திரைக் கலைஞர் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஜெய் பீம் திரைப்படம் சிறப்புக் காட்சியை தோழர் இரா. நல்லகண்ணு மற்றும் தோழர்கள் காண, இராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தாகூர் ஃபிலிம் சென்ட்ரலில் 25.-11.-2021 மதியம் 3.30 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களும், தோழர் இரா.முத்தரசன், தோழர் கே.சுப்பராயன், தோழர் மு.வீரபாண்டியன், தோழர் பா. கருணாநிதி, தோழர் எம்.எஸ். மூர்த்தி மற்றும் கட்சித் தோழர்களும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களும் பங்கு பெற்றனர். குறிப்பாக ஜனசக்தி கார்டூனிஸ்ட் டி.பி.ஜெயராமன் இந்நிகழ்வு சிறக்க உறுதுணையாக இருந்தார். நடிகர் திரு சிவகுமார், திரு சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் முடிவில் ஜெய் பீம் படத்தை தயாரித்து நடித்த சூர்யா சிவக்குமார் அவர்களுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கன்னத்தை வருடி தனது அன்பையும், ஆதரவையும், வாழ்த்துக்களையும் தோழர் இரா.நல்லகண்ணு தெரிவித்தார்.
தோழர் இரா.முத்தரசன் அவர்கள் சூர்யா சிவக்குமார் அவர்களுக்கு செந்துண்டு அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தம் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் தோழர்கள் வி.கே.கோபாலன், டி.பி.ஜெ, வழக்கறிஞர் அசோகன், மோ.ஜேம்ஸ், உதயா, கணபதி இளங்கோ, பேரா கோ. தாமோதரன் மற்றும் எண்ணற்ற தோழர்கள் கலந்து கொண்டனர்.