ஜனநாயகத்தை தகர்க்கிற, தீயசக்திகளுக்கு எதிராக முரசு முழங்கட்டும்! – கே.சுப்பராயன் MP
மாநிலங்களவையிலிருந்து தோழர் பினாய் விஸ்வம் உட்பட, 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்!
மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை.
சட்டமுன்வடிவுகளின் மீது விவாதிக்கவும்’ அனுமதிப்பதில்லை!
பின்னர் எதற்கு நாடாளுமன்றம்? என்று கண்டனக்குரல் எழுப்பியது தான் குற்றமாம்!?
நாடாளுமன்ற நடைமுறைகளை அவைத்தலைவரே மீறுகிறபோது அதை எதிர்த்து குரல் கொடுப்பது குற்றமா?
கடந்தமுறை வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேறியபோது ,அவை விதிப்படி டிவிசன் கேட்டதை நிராகரித்து முறைகேடாக நிறைவேற்றிக்கொண்டதற்கு இவர்மீது யார் நடவடிக்கை எடுப்பது?
நாட்டின்குடியரசுத் தலைவர், குடியரசின் துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள் என அனைவருமே, ஜனநாயக முறையை கருவறுத்துத்தகர்க்கக் கற்றுக்கொடுத்த, ஆர்எஸ்எஸ் என்ற ஜனநாயக விரோத அமைப்பில் கற்றவர்கள்!
கற்றவர்கள் கற்ற பின் அதற்குத் தக நடக்கிறார்கள்!
ஜனநாயக அமைப்பிற்குள் இருந்து கொண்டே ஜனநாயகத்தை தகர்க்கிற, தீயசக்திகளுக்கு எதிராக
முரசு முழங்கட்டும்!
கே.சுப்பராயன் MP