சொந்தக் கட்சிக்கு எதிராக சுப்பிரமணியசாமி தொடர் தாக்குதல்
புதுதில்லி, நவ. 26 – “நாட்டின் பொருளாதாரம், எல்லைப் பாதுகாப்பு என அனைத்தி லும் மோடி அரசு தோற்று விட்டது!” என்று பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார். மோடி அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’ என்று குறிப்பிட்டு சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் பொருளா தாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி அடைந்துவிட்டது. எல்லைப் பாது காப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது. அது போல் தேசப் பாதுகாப்பில் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் அர சியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர். உள்நாட்டு பாதுகாப்பாவது சரியாக இருக்கும் என்றால் அதிலும் காஷ்மீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை எடுத்துக் கொண்டால், ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது என்று சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார். “மோடி அரசின் அறிக்கை அட்டை: பொருளாதாரம் – தோல்வி; எல்லைப் பாதுகாப்பு – தோல்வி; வெளியுறவுக் கொள்கை – ஆப்கானிஸ்தான் ஃபியாஸ்கோ; தேசியப் பாதுகாப்பு – பெகாசஸ் என்எஸ்ஓ (NSO); உள் நாட்டுப் பாதுகாப்பு – காஷ்மீர் இருள்…” – என்று பதிவிட்டுள்ள சுப்பிர மணியசாமி, இவற்றுக்கெல்லாம் பொறுப்பாளி யார்?
என்ற வினாவை எழுப்பியுள்ளார். “2014-இலும், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நடந்த 2019 தேர்தலிலும் நீங்கள் மோடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட்டீர்கள். மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சர்வ வல்லமை கொண்ட நாடாக மாறும் என்றீர்கள்… இப்போது தவறுகளுக்கு மட்டும் மோடி பொறுப்பா?”
என்று இந்திரன் என்ற சமூகவலைதளவாசி சுப்பிரமணியசாமியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், “அது சரிதான்… மோடியின் செயல்படாத தன்மைக்கு நான்தான் பொறுப்பு. ஏனென்றால், அனைத்து வித அதிகாரங்களையும் நான்தானே கொண்டிருக்கிறேன்… மோடியிடம் ஒன்றுமே இல்லை பாருங்கள்…” என்றும் சுப்பிரமணிய சாமி கிண்டலாக பதிலளித்துள்ளார். “வங்கதேசத்தில் இந்துக்களைக் கொல்வது பற்றி அரசு என்ன நினைக் கிறது? இது ஒன்றிய அரசுக்குத் தெரி யாதா? உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? அவர் சந்நியாசம் சென்று விட்டாரா?” என்று அமித்ஷாவையும் சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார். “குஜராத்திலாவது மோடி வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவாரா?” என்ற சமூகவலைதளவாசியின் மற் றொரு கேள்விக்கு, “மோடியின் பொரு ளாதார ஆலோசகராக இருந்த அர விந்த் சுப்பிரமணியனை கேளுங்கள், இல்லாவிட்டால் அவர் 2013-இல் பிசி னஸ் ஸ்டாண்டர்டில் எழுதிய கட்டுரை யை கூகுளில் தேடிப் படியுங்கள்” எனவும் சுப்பிரமணியசாமி பதி லளித்துள்ளார்.