சென்னையில் சாலை பணி: முதலமைச்சர் எச்சரிக்கை
சென்னை, ஜன. 15 – சாலையை அகழ்ந்தெடுக்கா மல் (மில்லிங்) புதிய சாலை அமைக்க கூடாது என்று முதல மைச்சர் எச்சரித்துள்ளார். பெருநகர சென்னை மாநக ராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கக்க உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி, 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற வருகின்றனர். இதன்படி, தேனாம்பேட்டை மண்டலம் வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கம் சாலை அண்மை யில் பெய்த மழையால் கடுமை யாக சேதமடைந்தது. இந்தச் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை அமைக்கும் பணிகளை முத லமைச்சர்மு.க.ஸ்டாலின் திடீரென பார்வையிட்டு ஜன.13அன்று இரவு ஆய்வு செய்தார். மகாலிங்கம் சாலையில் தார்க்கலவையில் தாரின் விழுக்காடு சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் போது தாரின் வெப்பநிலை சரியான அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறி யாளர்களுக்கு அறிவுறுத்தினார். வலைதளப் பதிவு இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து அகழாய்வு (மில்லிங்) செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறி வுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்” என எச்சரித்துள்ளார்.