சென்னையில் கம்பீரமாக வலம் வந்த அலங்கார ஊர்திகள்!
சென்னை, ஜன. 27- நாட்டின் 73ஆவது குடியரசு தினம் மூவர்ண கொடி ஏற்றத்துடன் தொடங்கி, சென்னை மெரினாவில் கோலா கலமாக நடைபெற்றது. குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு, தமிழ் ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசிய கொடியேற்றி குடியரசு தின நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். கொடி ஏற்றத்தின் போது, விமானப் ்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப் பட்டது. தேசிய கீதம் இசைத்த பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, வான்படை, கடலோர காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை என பல்வேறு பிரிவினர் அணி வகுத்து கடற்கரை சாலையை அலங்க ரித்தனர். முப்படைகளின் ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றன. தமிழ்நாடு காவல் ஆயுதப் ப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தமிழ்நாடு கமாண்டோ படைப் பிரி வினர், குதிரைப் படை பிரிவினரும் அணிவகுத்தனர்.
பதக்கம்
இதையடுத்து வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது, நாராயணசாமி நாயுடு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம்ஆகிய விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். மாநிலத்திலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்ந் தெடுக்கப்பட்ட, திருப்பூர் தெற்கு காவல்நிலையத்திற்கு முதலிடத் ்திற்கான பரிசுக் கோப்பையை முதல மைச்சர் வழங்கினார்.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
முதலாவதாக அணிவகுத்த தமிழ்நாடு இசைக்கல்லூரி சார்பில் அமைக்்கப்பட்ட நாதஸ்வர ஊர்தி, நிகழ்ச்சியை வசீகரமாக்கியது. தில்லி விழாவில் அனுமதி மறுக்கப் ்பட்ட வேலு நாச்சியார், குயிலி, பூலித் ்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், மருது சகோ தரர்கள் ஆகியோர் சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் அடங்கிய ஊர்திகள் கடற் கரை சாலையில் கம்பீரமாய் வலம்வந்தன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் சிலைகள் அடங்கிய ஊர்தியும், தந்தை பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வவேசு ஐயர், காயிதே மில்லத் ஆகியோர் பெருமை பறைசாற்றும் வகையில் அமைக்கப் ்பட்ட சிலைகளின் அலங்கார ஊர்தியும் அணிவகுத்தன. மேலும் கொரோனா காரணமாக கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்க ப்பட்டிருந்தது. மேலும், வழக்கமாக ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் 28 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெற்றது.