சுடுகாட்டு ஓநாய்போல் கலகத்திற்கு ஊளை இடுகிறாரே…..!? மோடி!
கே.சுப்பராயன் MP
தனி மனிதவிரோத, குரோதங்கள் எப்போதுமே கம்யூனிஸ்டுகளிடம் இருந்ததில்லை.
தத்துவரீதியான, கொள்கைரீதியான, ஆக்கபூர்வ விமர்சனங்களை முன்வைப்பதே, அதன்மூலம் மக்களை சிந்திக்கத் தூண்டுவதே கம்யூனிஸ்டுகளின் இயல்பான பாணி ஆகும்.!
அதிலிருந்து தடம்புரண்டதில்லை!
நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியினர் என்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள் என்பதைக்காது கொடுத்துக் கேட்கவும்,
விளக்கமளிக்கவும்நாடாளுமன்றமுறைப்படி கடமைப்பட்டவர் தான் பிரதமர்!
நேரு முதல் எல்லா பிரதமர்களும் இதைத்தான் செய்தார்கள்!
ஆனால், பிரதமர் மோடி எப்போதும் போல் இப்போதும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்குபெறாமல் புறக்கணித்தார்!
அவருக்கு ஜனநாயக வடிவங்களின் மீது தீரப் பகையுண்டு!
ஏனெனில், ஜனநாயகத்தை நிராகரிக்கவும், வெறுத்துப் பகைக்கவும் கற்றுக்கொடுக்கிற ஆர்எஸ்எஸ் சில் பாடம் படித்தவர் அவர்!
நாடாளுமன்றக் கூட்டத்தை நிராகரித்துவிட்டு
அதே அன்று, வாரணாசி போய் அவர் நடத்திய ‘திருவிளையாடல்கள்’ தேசத்தை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது!
மீண்டும் தேச ஒற்றுமைக்கு தீ வைத்து, சகோதரக் கலவரங்களுக்கு முரசு கொட்டிவிட்டாரே என்று நாடுவெட்கித் தலைகுனிகிறது!
அவரது வஞ்சகம் நிறைந்த ‘வார்த்தை வலைவிரிப்புகளின் நாசகார முன் அடையாளங்கள்’ தென்படத் தொடங்கிவிட்டன!
“பகைவளர்க்கா அறிவைக் கொடு”
என்றுதான் ரிக்வேதம் பேசுகிறது!
பண்டைய இந்திய மண்ணும், மரபுகளும் பேணிப் பாதுகாத்து, நமக்கு பிதுரார்ஜித சொத்தாக விட்டுச்சென்றதுதான் இந்த ஞானச்செல்வம்!
அதை நிராக்கிறார் மோடி!
“வசுதைவ குடும்ப முறை” என்பதுதான் இந்திய முறை, இந்து முறையும் கூட!
அதன் மெய்ப்பொருள் அனைவரையும் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கும் பண்பட்ட முறையாகும்!
ஆனால், ரிக் வேதரிஷியின் அறிவுரைப்படி, “பகை வளர்க்கா அறிவை”ப் பெறாமல், இந்தியசகோதரர்களிடம் பகை வளர்க்கத் தூண்டிவிடுகிறாரே பிரதமர் மோடி!?
பண்டைய ரிஷிபுங்கவர்கள் வகுத்தளித்த இந்திய மரபு,”வசுதைவ குடும்ப முறையாகும்!
இதைக்கட்டி வளர்க்காமல், சுடுகாட்டு ஓநாய்போல் கலகத்திற்கு ஊளை இடுகிறாரே…..!?
எத்தனை முறை கங்கையில் மூழ்கி எழுந்தாலும் மோடியின், அவரது அமைச்சரவையின் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை!
இல்லவே இல்லை!
மோடி அமைச்சரவையின் பாவங்களுக்கு “இறைவன்”(!?) தண்டனை தருகிறானோ இல்லையோ, மக்கள் தண்டிக்கத் தயாராகிவிட்டார்கள்!