சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது தற்போது பெட்ரோல் – டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 8 வரை குறைக்க முடியும்!
புதுதில்லி, ஜன.6- சர்வதேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ள தற் போதைய சூழலிலாவது, இந்தியா வில் பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி வலி யுறுத்தியுள்ளார். சா்வதேச சந்தையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. மாறாக குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் விலையை உயர்த்தா விட்டாலும், சர்வதேச நிலவரத் திற்கு ஏற்ப விலையைக் குறைக்க மோடி அரசு தயாரில்லை. பெட்டி ரோல் விலை 102 ரூபாய், டீசல் விலை 92 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதன்கிழ மையன்று டுவிட்டரில் கருத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்த தால் உள்நாட்டில் எரிபொருள் விலை உயா்த்தப்படுகிறது என்று ஒன்றிய அரசு காரணம் கூறி வரு கிறது. ஆனால், இப்போது சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு கேலன் 7.3 அமெரிக்க டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த விலையுடன் ஒப்பிடும் போது இப்போது பெட்ரோல் விலை யை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைக்க முடியும். எனவே, இனியாவது இந்த எண்ணெய் விற் பனைக் கொள்ளையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். “பெட்ரோல், டீசல் விற்பனை யை அதிக விலைக்கு விற்பனை செய்து, மக்கள் பணத்தைக் கொள் ளையடிப்பதை ஒன்றிய அரசு கை விட வேண்டும். மோடி தலைமை யிலான அரசு கொள்ளையடித்து வாழும் அரசாகவே திகழ்கிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் பணத்தை பெட்ரோல் விலையைப் பயன்படுத்தி இன்னும் எத்தனை காலத்துக்கு கொள்ளையடிப்பார் கள்?” என்று காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுா்ஜேவாலாவும் கேள்வி எழுப்பி யுள்ளார்.