சமூக உணவுக்கூடம் பற்றி முடிவெடுக்க வேண்டும் பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசுக்கு முக்கியக் கடமை!
புதுதில்லி, நவ.18- “பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வய திற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக் கள் வாழவும், உணவு பெறுவ தற்கும் உள்ள அடிப்படை உரி மைகளை மீறுவதாக உள்ளது. எனவே, உணவு பாதுகாப்புச் சட்டத் தின் கீழ், பட்டினிச் சாவை தடுக்க தேசிய உணவு மையம் ஏற்படுத் தப்பட வேண்டும்” என்று சமூக ஆர்வலர் அனுன் தவான் உள் ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தி ருந்தனர். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு 2 நாட்களுக்கு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது தான் நீதிபதிகள் இவ்வாறு கூறி யுள்ளனர். “சமூக உணவுக் கூடம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் எந்த உறுதியும் தெரிவிக்கப்படாதது, தங்க ளுக்கு அதிருப்தி அளிக்கிறது. பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசின் முக்கிய கடமை. எனவே, அடுத்த மூன்று வாரங்க ளுக்குள் அனைத்து மாநில அரசு களுடன் பேசி, சமூக உணவுக் கூடம் அமைப்பதற்கான தேசிய கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “சார்பு நிலைச் செய லர் வாயிலாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்த அவர்கள், “ஒன் றிய அரசு நீதிமன்றங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டனர்.