சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு இன்று (செப்.15 2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மணிஷ் குஞ்சம் தலைமையில் நடைபெறவிருந்த பாத யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ள சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும். ஜனநாயகப்பூர்வ போராட்ட இயக்கங்களை ஒடுக்குவது தான், முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு எதிரான, ஜனநாயக விரோதமான போராட்ட முறைகளை மக்கள் மேற்கொள்வதற்கு காரணமாகும்.
சத்தீஸ்கர் அரசாங்கம் அதன் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்; பாத யாத்திரை இயக்கம் நடைபெற அனுமதி வழங்க வேண்டும்.
“பாரத ஒற்றுமை” என்னும் முழக்கத்துடன் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்தி வருகிறார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாத யாத்திரை இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.