கோ.சண்முகநாதன் காலமானார் முதல்வர் நேரில் அஞ்சலி
சென்னை, டிச.21- முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணா நிதியின் உதவியாளராக பணி யாற்றிய கோ. சண்முகநாதன் (வயது 80) டிசம்பர் 21 செவ்வா யன்று காலமானார். மறைந்த முன்னாள் முதல் வர் கருணாநிதியிடம் சுமார் 50 ஆண்டுகளாக தனி உதவியாள ராக பணியாற்றியவர் சண்முக நாதன். தமிழ் சுருக்கெழுத்து நிரு பராக தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்தவர் சண்முக நாதன். முதன்முறையாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற 1967 இல் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவரிடம் சண்முக நாதன் தனி உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். கருணா நிதி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துக களை எழுத்துமூலம் வெளியிட்ட வர் சண்முகநாதன். அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டவர். இந்நிலையில் உடல்நலக்குறை வால் சென்னை காவேரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த கோ. சண்முகநாதன் செவ் வாயன்று காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகி யோர் மாலையணிவித்து அஞ் சலி செலுத்தினர்.