‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் கணிப்பு மூலப் பொருட்கள் விலை உயர்வு வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும்!
புதுதில்லி, நவ. 26 – இந்தியாவில் அதி கரித்து வரும் மூலப்பொரு ட்களின் விலை உயர்வு, வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என்று உலக ளாவிய நிதி மேலாண்மை நிறுவனமான ‘கோல்டு மேன் சாக்ஸ்’ தெரிவித்துள் ளது. “கொரோனா பாதிப்பு கள் குறைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரச் செயல் பாடுகள் அதிகரித்துள்ளது. மேலும், தடுப்பூசிகள் போடுவதும் அதிகரித்து வருகிறது. அத்துடன், அரசின் மூல தனச் செலவுகளும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வளர்ச்சி அதிகரிக்கும் என கருதலாம். இருப்பினும், மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, தயாரிப்பு களின் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி விலை அதிகரிக்கும் பட்சத்தில், நுகர்வு குறை யவும் வாய்ப்பிருக்கிறது. இது வளர்ச்சிக்கு ஒரு சவா லான விஷயமாக இருக் கும்” என்று ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் கூறியுள் ளது. மேலும், இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு 2021-ஆம் ஆண்டில் 8 சத விகிதமாகவே இருக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் முன்பு கணித்திருந்தது. அதனை தற்போது 9.1 சதவிகிதமாக மாற்றி அமைத்துள்ளது. 2021-இல் 5.2 சதவிகித மாக இருந்த நுகர்வோர்விலை பணவீக்கம் 2022-இல் 5.8 சதவிகித மாக உயரும் என்றும் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.