‘கொரோனா வைரஸ் என்றெல்லாம் ஒன்று கிடையாது’
கபில் முனி கோயில் அர்ச்சகர் அதிரடி
கொல்கத்தா, டிச.30- கொரோனா தொற்றுப் பர வல் நாடு முழுவதும் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், “கொரோனா என ஒரு வைரஸே கிடையாது” என்று மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கபில் முனி கோயில் தலைமை அர்ச்சகர் கியான் தாஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கங்காசாகர் திருவிழாவை கட்டாயம் நடத்தியே தீருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கும்பமேளாவைப் போன்றே கங்காசாகர் மேளாவும் மிகப் பெரிய திருவிழாக்களின் ஒன்றா கும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கபில் முனி கோயில் அமைந்துள் ளது.
இந்த கோயிலை மையப் படுத்தி, மகர சங்கராந்தி அன்று கங்காசாகர் மேளா நடைபெறும். உலகம் முழுவதும் இருந்து இந்த கங்காசாகர் மேளாவில் பக்தர்கள் கலந்து கொள்வார் கள். கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரத்தில் நீராடுவார்கள். ஆனால், கடந்த 2 ஆண்டு களாக கொரோனா தொற்று அபா யம் காரணமாக, கங்காசாகர் மேளா நடைபெறவில்லை. கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் மீண் டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், இந்தாண்டும் கங்கா சாகர் மேளா நடைபெறுவது சந் தேகமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், “கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை. இதற்குப் பயந்தெல் லாம், இந்த மதத் தலத்திற்கு வரு வதை மக்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். இந்த முறை கங்கா சாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள்” என்று கபில் முனி கோயில் தலைமை அர்ச்சகர் கியான் தாஸ் கூறி யுள்ளார்.