கேளுங்கள், கம்யூனிஸ்டுகளிடம்…
“பள்ளிக்குச் செல்லும்போது சீருடையில் செல்வதா அல்லது எனக்குப் பிடித்த உடையில் செல்வதா என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரம் எனக்கு வேண்டும்.” “அது பற்றி நீங்கள் என்ன நினைக்கி றீர்கள்?” கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள் என்ற நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவாளர் கிளப் ஆகிய இரண்டும் இணைந்து ஏற்பாடு செய்திருந் தன. அதில் ஒரு பள்ளிக்கூட மாணவிதான் இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.
ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் டமுரா டொமோகோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கிரா யோஷிகோ ஆகிய இருவரும்தான் வினாக்களுக்கு விடையளிக்கக் காத்தி ருந்தனர். பதின்பருவத்தினர் முதல் 20கள் மற்றும் 30களில் இருப்பவர்களும் வினாக்களை எழுப்பக் குழுமியிருந்தனர். “மாணவர்களின் தனித்தன்மையை பள்ளிகள் மதிக்க வேண்டும். தங்கள் இஷ் டத்திற்கு மாணவர்கள் மீது கட்டுப்பாடு களைத் திணிக்கக்கூடாது” என்று கிரா யோஷிகோ விடையளித்தார். 20களில் இருந்த சிலர், “சுற்றுச்சூழல் பிரச்சனையில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிலை என்ன?” என்றனர். “பெரும் லாபத்தைக் குறிவைத்து இயங்கும் பொரு ளாதார நடவடிக்கைகள் பூமி வெப்பமயமா வதை அதிகரிக்கவே செய்யும். பொருளா தாரம் சென்று கொண்டிருக்கும் திசையில் மாற்றம் தேவை. ஒரு சிறிய அறுவை சிகிச்சை அவசியம் என்று நாங்கள் நினைக் கிறோம்” என்றார் கிரா யோஷிகோ. “அரசியல் சட்டப் பிரிவு 9யை நீக்க ஏன் ஆளும் தாராள ஜனநாயகவாதக் கட்சி முயல்கிறது?”
மைக்கைக் கையில் பிடித்த கட்சியின் துணைத்தலைவர் டமுரா டொமோகோ, “நமது அரசியல் சட்டத்தின் பிரிவு 9 என்பது போரை நிராகரிக்கிறது. இந்தப் பிரிவை நீக்குவதன் மூலம் வெளிநாடுகளில் நடக்கும் போர்களில் நமது பாதுகாப்புப் படையினரை இறக்கும் முயற்சி நடக்கிறது. நமது நாடு ஆயுதங்களைப் பயன்படுத்து வதை அந்தப் பிரிவு கட்டுப்படுத்துகிறது. இந்த நடவடிக்கையை நாம் அனுமதிக் கக்கூடாது” என்றார்.
கல்லூரி மாணவர் ஒருவர், “நான் சுய மாக சம்பாதிக்கிறேன், அதை எனது கல்விச் செலவுக்கும் வைத்துக் கொள்கிறேன். ஆனால் சமாளிப்பது சிரமமாக இருக்கி றது. கல்விக்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்தார். நிறுவனம் ஒன்றில் தற்காலிக ஊழியராகப் பணியாற் றும் ஒருவர், “ஒரு மணி நேரத்திற்கு 1,500 யென் என்ற தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறினால் சமாளித்துக் கொள்ள முடியும்” என்று உரையாடலில் கலந்து கொண்டார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலா ளர்களுக்கு இடையிலான ஊதிய வேறு பாடு பற்றி ஒரு தொழிலாளர் கேள்வி எழுப்பி னார். நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேரடியாக விவாதம் நடத்தியது மகிழ்ச்சி யாக இருக்கிறது என்று அவர் பேசுகையில் குறிப்பிட்டார். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை ஜப்பான் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தி வருகிறது.