குளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்
24-வது குளிர்கால ஒலிம்பிக் சீன தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளியன்று தொடங்குகிறது. கொரோனா பதற்றத்துக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 107 வகையான (7 பிரிவு) விளையாட்டுக் கள் நடத்தப்படவுள்ளன. 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர்கள் கலந்துகொள் கின்றனர். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தொடங்கி வைக்கிறார்.
கடும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலால் சீன அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனை செய்துகொண்ட வீரர்கள் நெகட்டிவ் சான்றிதழுடன் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டும். அனுமதியின்றி வேறு எங்கும் செல்ல முடியாது என செய்திகள் வெளியாகி யுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வீரர் – வீராங்கனைகள் மருத்துவ விலக்குகளை காண்பித்து பங்கேற்கலாம்.
சீனர்களுக்கு மட்டுமே அனுமதி
ஒலிம்பிக் தொடரை காண கொரோனா பரவலால் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சீனர்கள் மட்டுமே ரசிகர்களாக அனுமதிக்கப்படு கிறார்கள். வேறு நாட்டவர்களுக்கு அனுமதி இல்லை.
இந்தியா சார்பில் ஒரே ஒரு வீரர்
குளிர்கால ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் ஆரிஃப் கான் என்கிற ஒரே ஒரு பனிச் சறுக்கு வீரர் தான் கலந்து கொள்கிறார். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் பிறந்த ஆரிஃப் கான் (31) 12 வயதில் தேசிய ஸ்லாலோம் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியவர். குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஸ்லாலோம் (Slalom), ஜெயண்ட் ஸ்லாலோம் Giant Slalom ஆகிய இரு பனிச் சறுக்கு போட்டி களில் பங்கேற்க உள்ளார்.
செயற்கை பனி
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் குளிர்ச்சி யான வறண்ட காலநிலை நிலவு கிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் செயற்கை முறையில் பனி பாறைகள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக 49 மில்லியன் கேலன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளன.(கேலன் : 4.5 லிட்டர் – அமெரிக்க அளவையில் 3.8 லிட்டர்).