குண்டூரின் ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி!
குண்டூர், ஜன. 28 – குண்டூரில் உள்ள ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்றுகிறோம் என்று இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட கலவர முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியப் பிரிவினைக்கு காரண மாக இருந்ததாக முகமது அலி ஜின்னாவை ஆர்எஸ்எஸ் பரி வாரங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இரண்டு நாடுகள் கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தவர் வி.டி. சாவர்க்கர்தான் என்பதை சாமர்த்தியமாக மறை த்து இந்த வேலையை- மதவெறி உண ர்ச்சியைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில்தான், ஆந்திர மாநிலம் குண்டூரில் முகம்மது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் கோபுரத்தின் மீது குடியரசுத் தினத்த ன்று தேசியக் கொடியை ஏற்றப் போகி றோம் என்று கலகத்தை ஆரம்பித்து ள்ளனர். இந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டவாறே திரளாக வந்து ஜின்னா டவர் மீது தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்த நிலையில், அத னை போலீசார் பெரும் முயற்சிக்குப் பிறகு தடுத்து நிறுத்தியுள்ளனர். கல வர முயற்சியில் ஈடுபட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.