குஜராத் பாஜக அரசுக்கு நீதிபதி கேள்வி ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என பிறர் முடிவு செய்ய முடியுமா?
காந்தி நகர், டிச. 10 – சாலையோரத் தள்ளுவண்டிகளில் அசைவ உணவு விற்பதற்கும், சாலை யோர ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளைக் காட்சிப்படுத்து வதற்கும் குஜராத் மாநிலம் அகமதா பாத், ராஜ்கோட், வதோதரா, பவ்நகர், ஜூனாகாத் நகராட்சிகள் கடந்த நவம்பர் 16 அன்று திடீரென தடை விதித்தன. இதனால், பல ஆண்டுகாலமாக தள்ளுவண்டி மூலம் வாழ்க்கை நடத்தி வந்த வியாபாரிகள், ஒரே இரவில் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர். வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் அதிகாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, அபராதம் என்ற பெயரில் தங்களின் தள்ளுவண்டிகளையும் பறிகொடுத்தனர். தற்போது அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள னர். அந்த வகையில், இறைச்சி உணவுத் தடைக்கு எதிராக, குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்னிலையில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி ஆணை யரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி வைஷ்ணவ், ஆணையரிடம் பல்வேறு கேள்வி களை எழுப்பினார்.. “உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்களுக்கு அசைவம் பிடிக்காது, அதுதானே?! மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிட வேண்டும், அசைவ சாப்பாடு களை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும்? நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.