“கிரிப்டோ கரன்சியை அனுமதித்தால் ரிசர்வ் வங்கி அங்கீகாரத்தை இழக்கும்”
கொல்கத்தா, டிச.10- கிரிப்டோகரன்சியை அனுமதித்தால் நாட்டில் பணப்புழக்கத்தின் மீதான தனது அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இழந்துவிடும் அபாயம் உள்ளது என்று ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் டி.சுப்பா ராவ் தெரிவித்தார். நாட்டில் அனைத்து வகை யான தனியாா் கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதிக்கவும் ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள அதிகார பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்குவதற்கான கட்ட மைப்பை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர் பாக விரைவில் நாடாளு மன்றத்தில் மசோதா நிறை வேற்றப்பட இருக்கிறது.
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை மற்றும் நியூயார்க் பல்கலைக்கழ கத்தின் வணிகக் கல்விப் பிரிவு இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கில் இது தொடர்பாக டி.சுப்பா ராவ் பேசியதாவது: இப்போது புழக்கத்தில் உள்ள செலாவணி முறை யில் இருந்து கிரிப்டோ கரன்சி முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. அதை முழுமையாக உள்ளே அனுமதித்தால் நாட்டில் பணப் புழக்கத்தை கட்டுப் படுத்துவது, பணவீக்கத் தைக் கட்டுக்குள் வைப்பது போன்ற பணிகளில் தனக் குள்ள அதிகாரத்தை ஆா்பிஐ இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. கிரிப்டோகரன்சி நாட்டின் நிதிக் கொள்கை யையும் பாதிக்கும். ஏற்கெனவே இந்தியா விலிருந்து மின்னணு முறை யில் வெளிநாடுகளுக்குப் பணம் செல்வது அதிகமாக உள்ளது. கிரிப்டோகரன்சி யின் பயன்பாடு அதிகரித் தால் நாட்டில் கடன் வழங்கல் மற்றும் பணமதிப்பைக் காத்து வரும் உச்ச அமைப் பான ரிசர்வ் வங்கிக்கு சிக்கல் கள் எழும் என்றார். -பிடிஐ