கியூபா : சோசலிச வளர்ச்சியே சாதனைகளுக்குக் காரணம்
ஹவானா, ஜன.15- கொரோனாவை எதிர்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி பீப்பிள்ஸ் டெஸ்பாட்ச் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை யில், கியூபாவின் சாதனைகளுக்கு சோசலிச வளர்ச்சியே காரணம் என்று குறிப்பிட்டுள்ளன. கியூபாவில் உள்ள மக்களில் 85 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல பணக்கார நாடுகளை விடவும் அதிகமானதா கும். ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் மக்களில் 60 முதல் 70 விழுக் காட்டினருக்குதான் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளன. இத்தனைக்கும் அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு வர்த்தகத் தடைகளையும் கியூபா கடக்க வேண்டியுள்ளது. அதோடு, தடுப்பூசி குறித்த அறிவியல் கோட் பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள். மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடுகள் உள்ளன.
இவையனைத்தும் கட்டணம் ஏது மின்றி செய்யப்படுகிறது. தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பெரிய, பெரிய பன்னாட்டு நிறுவனங் கள் தங்கள் லாபத்தைப் பெருக்குவ தற்கான வழிகளை உருவாக்க முயல் கின்றன. ஆனால், தங்கள் தடுப்பூசிக ளைப் பெற்றுக் கொள்ளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அதைத் தயாரிக் கும் தொழில்நுட்பத்தையும் சேர்த்தே கியூபா தருகிறது என்று பீப்பிள்ஸ் டெஸ்பாட்ச் இணையதளம் வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது. பெரும் நிறுவனங்களின் ஏகபோகத்தை முறி யடிக்கும் வகையில் கியூபாவின் இந்த நடவடிக்கை இருக்கிறது. 1960களில் இருந்தே அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது. இவற் றைத் தாண்டி, வெனிசுலா, வியட் நாம், ஈரான், நிகரகுவா, அர்ஜெண்டி னா மற்றும் மெக்சிகோ போன்ற நாடு கள் கியூபாவின் தடுப்பூசிகளை அங்கீ கரித்துள்ளனர் அல்லது அதில் விருப் பம் தெரிவித்திருக்கிறார்கள். மிகவும் பலமான மருத்துவத்துறைதான் கியூ பாவின் இந்த சாதனைகளுக்கு அடித் தளமாக இருந்திருக்கிறது. சோசலிச வளர்ச்சிதான் உலகிலேயே தரமான மருத்துவத்துறையை உருவாக்கிய தோடு, அந்த உணர்வுதான் உலகம் முழுவதும எங்கு தேவை ஏற்பட்டா லும் கியூப மருத்துவர்களை அங்கு செல்ல வைக்கிறது என்றும் பீப்பிள்ஸ் டெஸ்பாட்ச் செய்திக் கட்டுரை தெரி விக்கிறது.