விளையாட்டு
களையிழந்த ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்
சர்வதேச பேட்மிண்டன் தொடர்களில் முக்கியமானது ஜெர்மன் ஓபனாகும். பரிசுத்தொகை மற்றும் போட்டி நடைபெறும் இடத்தின் அமைப்புகள் என அனைத்திலும் மெகா சிறப்புகள் இருக்கும். இதனால் பேட்மிண்டன் உலகம் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும். இந்நிலையில், நடப்பாண்டிற்கான ஜெர்மன் ஓபன் மல்ஹெய்ம் என்ற நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனை விட நடப்பு சீசன் சுவாரஸ்யமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கு முதல் காரணம் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தான். போர் பதற்றத்தால் ஜெர்மன் ஓபன் தொடரில் பெரும்பாலான நட்சத்திர வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கவில்லை. இதனால் ஜெர்மன் ஓபன் களையிழந்து பெயரளவில் நடைபெற்று வருகிறது.