தமிழகம்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்

சென்னை,மார்ச் 11- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், ஒன்றிய பாஜக அரசு தனது அதி காரத்தைப் பயன்படுத்தி பிற்போக் கான கருத்துகளைப் பாடத்திட்டங் களில் புகுத்துகிறது என்றும் பல் கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் தென் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மார்ச் 11 வெள்ளியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரை யாற்றினார். அவர் பேசியதாவது: தென்னகத்தைச் சார்ந்த ஆறு மாநிலங்களின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இருக்கக்கூடிய இந்த அவையில், தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை தெரிவிப்பதற்குப் பெருமை யாக இருக்கிறது. இத்தகைய பெருமையினையும் புகழையும் பெற்றுத் தந்துள்ள தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ்நாட் டிலுள்ள பல்கலைக்கழகங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். 2020-21-ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தர வரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக் குள் உள்ளன. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அகில இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.

உயர்கல்வியில் தமிழ்நாடு சாதனை

பள்ளிக் கல்வி முடித்து, உயர் கல்விக்கு பயிலவரும் மாணவர் களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு; ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அள வுக்கு மிக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரி யை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனை.அதுமட்டு மல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசி ரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கு கிறது. தமிழ்நாட்டில் 1,553 கல்லூரி கள், 52 அரசு மற்றும் தனியார் பல் கலைக்கழகங்கள், 1,096 தொழிற் கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. தொழிற்கல்வியிலும், மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுத்திருக் கிறது தமிழ்நாடு அரசு.

பெண்ணுரிமைக்கு முன்னோடியாக திகழும் தமிழகம்

பெண் கல்வியிலும் தமிழ்நாடு அரசு பெண்களுக்கென்று தனிக் கல்லூரிகள், இருபாலர் கல்லூரிக்கு அனுமதி, பெண்களுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், இளநிலை, முது நிலை மற்றும் முனைவர் படிப்பில் பெண்களுக்கு உதவித்தொகை, அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ச்சி பெற பயிற்சி தரும் மையங்கள், வேலைவாய்ப்பிற்கான கணினிப் பயிற்சி, முனைவர் ஆராய்ச்சிப் படிப் பிற்கான உதவித்தொகை போன்ற மாணவியர்களுக்கான சிறப்புத் திட்டங் களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநில மாகத் திகழ்கிறது. இத்தனை ஆண்டுகளும் இல்லாத வகையில், உயர்கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதி களுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் விரிவுபடுத்தப்பட உள் ளது. அதிகளவிலான நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்றுக் குழுவின் தரநிலையை அடை வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, தொடக்கத் தில் நான்கு பொறியியல் கல்லூரி களில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அத்தோடு, தொழிற் கல்வியிலுள்ள பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

தற்போது பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பட்டதாரிகளை உரு வாக்குவதும், முனைவர் பட்டங் களை வழங்குவதும், தேசிய மற்றும் உலகளவில் தரவரிசை பெறுவது மாகவும் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் கூட, இந்திய உயர்கல்வியின் முக்கியமான குறிக்கோளான அனைவருக்கும் வேலை தரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். திறன் சார்ந்த கல்வியும் பயிற்சியும் பாடத்திட்டங்களில் கட்டாயப்படுத்துதல் அவசியம். அதனால்தான், மார்ச் 1 அன்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தை மாணவச் செல்வங்களுக்காகத் துவக்கி வைத்தேன்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு

பல்கலைக்கழகத்தின் தரத்தையும் செயல்பாட்டையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுவோர் துணைவேந்தர் கள்தான். நீங்கள் அனைவரும் அறிவி யல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்க ளிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவ லைக்குரியதாக உள்ளது. கல்வி முழு மையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படு வதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கை யின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்.இந்த மாபெரும் மாநாடு தன் நோக்கங்களில் வெற்றி பெறவும் அதன் மூலம் நமது நாட்டின் உயர்கல்வி மேன்மை பெற வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button