தமிழகம்
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாகக் கூறி, அவரைக் கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை ஜோதிமணி துவங்கியுள்ளார். இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.