கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவு வழக்கில் பிஷப் பிராங்கோ விடுதலை
கோழிக்கோடு, ஜன.15- அருட்சகோதரியை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இருந்து பிஷப் பிராங்கோ முளைக்கல் விடுதலை செய்யப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு கவலை அளிப்பதாக கேரள மகளிர் ஆணைய தலைவர் பி.சதிதேவி தெரிவித்துள்ளார். மடங்களிலும், பிற இடங்களிலும் பெண்களை துன்புறுத்துவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் எதிர்பாராத தீர்ப்பு இது. இந்த வழக்கின் ஆரம்ப நாட்களில் இருந்தே காவல் துறையினரும், அரசுத் தரப்பும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு சாட்சி யங்களைச் சேகரித்தனர். ஆனால் அவருக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. தீர்ப்பு விவரங்களை அறிந்த பிறகே அவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை கூற முடியும். மேல்முறை யீடு செய்யும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பாலி யல் வன்கொடுமை வழக்குகளில் புகார் செய்பவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கோட்டயம், ஜன.15- அருட்சகோதரி (கன்னியாஸ்திரி) அளித்த பாலியல் வல்லுறவு வழக்கில் பிராங்கோ முளைக்கலை விடுதலை செய்து கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.கோப குமார் தீர்ப்பளித்தார். 2018 ஜூன் 27ஆம் தேதி குறவிலங்காடு நாடு குன்றில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மிஷன் இல்லத்தில் தங்கியிருந்த அருட்சகோதரி அளித்த புகாரின் பேரில், குறவிலங்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிஷப் பிராங்கோ முளைக்கல் குற்றவாளி என கண்டறியப்பட்டது. 2018 செப்டம்பர் 21 அன்று பிஷப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 105 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் மீதான பாலியல் வல்லுறவு, அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணை உடல் ரீதியாக பயன்படுத்தல் உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் பிராங்கோ மீது சுமத்தப்பட்டன. 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் மூன்று பிஷப்கள், 11 பாதிரியார்கள் மற்றும் 24 அருட்சகோரிகள் உட்பட 84 சாட்சிகள் இருந்தனர். இதில் 33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வெள்ளியன்று (ஜன.14) தீர்ப்பை கேட்பதற்காக பிராங்கோ முளைக்கல் தனது சகோதரர் மற்றும் சகோதரியின் கணவருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
எதிர்பாராத தீர்ப்பு
வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்தபடி இல்லை என்று சகோதரி லூசி களப்புரா கூறினார். சாட்சியங்களாலும், சூழ்நிலைகளாலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவரை ஒரே வார்த்தையில் விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். கத்தோலிக்க திருச்சபையின் குற்றவாளியான பாதிரியாரே விடுவிக்கப்பட்ட சூழ்நிலையை நீதிமன்றமே மதிப்பிடட்டும். அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது. நீதிமன்றமே குற்றவாளி யைக் கண்டுபிடிக்கும் என்று நம்புவதாகவும் லூசி களப்புரா கூறினார்.
நீதிக்கான போராட்டம் தொடரும்
கன்னியாஸ்திரியை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் பிராங்கோ முளைக்கலை விடுவித்த நீதிமன்ற தீர்ப்பு நம்ப முடியாதது என சகோதரி அனுபமா கூறினார். இறக்க நேரிட்டாலும் பரவாயில்லை பாதிக்கப்பட்ட வருக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இந்த வழக்கில் தான் கைவிடப் பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சகோதரி அனுபமா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகப் போராடிய மற்ற கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறுகையில், பிராங்கோ போதுமான பணமும் செல்வாக்கும் உள்ள வர். பணம், செல்வாக்கு இருந்தால் எதையும் சாதிக்கலாம். அப்படிப்பட்ட காலம் இது. காவல்துறையும், வழக்கறிஞரும் காட்டிய நீதி நீதித்துறையிடமிருந்து கிடைக்கவில்லை. பணமும் செல்வாக்கும் இந்த வழக்கில் ஆதிக்கம் செலுத்தியதாக நாங்கள் நம்புகி றோம் என்றும் அனுபமா கூறினார். கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நாங்கள் பாதுகாப்பாக இல்லை. வெளியில் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரி மடத்திற்குள் வெளியே கூற முடியாத விசயங்கள் நடந்து கொண்டிருக் கின்றன என்றார். இதுவரை தன்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அனுபமா, இந்த பயணத்தில் அனைவரும் தன்னுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.