இந்தியா

கடந்த 6 மாதங்களில் இல்லாத மோசமான நிலை 2022 ஜனவரியில் வீழ்ச்சி கண்ட இந்திய சேவைத்துறைகள்

புதுதில்லி, பிப். 4 – 2022 ஜனவரியில், இந்தியாவின் சேவைகள் துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் வழக்கமாக சேவைகள் துறைகளின் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஆனால் கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு சேவைகள் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சேவைகள் துறைக்கான ‘ஐஎச் எஸ் மார்க்கிட் குறியீடு’ (IHS Markit Index) 2021 டிசம்பர் மாதத்தில் 55.5 சதவிகிதமாக இருந்தது. இது 2022 ஜனவரி மாதத்தில் 51.5 சதவிகித மாகக் குறைந்துவிட்டது. முன்னதாக ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கை யில், 2022 ஜனவரி மாதத்தில் சேவை கள் துறைக்கான குறியீடு 53 சத விகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருந்தது. ஆனால் ராய்ட்டர்ஸ் மதிப்பீட்டை விட குறைவான அள விலேயே வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல் லாத மிக மோசமான அளவாகும். சேவைகள் துறையில் தேவை குறைவு காரணமாக, வேலை யாட்களின் எண்ணிக்கையையும் நிறு வனங்கள் குறைத்து வருகின்றன. 2021 டிசம்பர் மாதத்தைப் போலவே 2022 ஜனவரி மாதத்திலும் நிறை யப் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிவாயு, உப கரணங்கள், போக்குவரத்து போன்ற வற்றுக்கான செலவுகள் அதி கரித்துள்ளதால் உள்ளீட்டுச் செல வுகள் உயர்ந்து, நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button