ஒரு பிரதமர் இவ்வளவு வேஷங்களா போடுவது?
சந்திரசேகர் ராவ் மீண்டும் சாடல்
ஹைதராபாத், பிப்.3- தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவ், கடந்த காலங்களில், பாஜக ஆதரவு நிலைபாடுகளை எடுத்து வந்தவர் ஆவார். மோடி அரசு நாடா ளுமன்றத்தில் கொண்டுவந்த பல சட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்துள்ளார். ஆனால், மாநிலங்களின் உரிமை பறிப்பு தொடர்பான விஷ யங்களில், சமீபகாலமாக பாஜக அரசையும், பிரதமர் மோடியை யும் கடுமையாக விமர்சிக்க ஆரம் பித்துள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது கோல்மால் பட்ஜெட் என் றும், மக்களுக்கு எதிரான பாஜக அரசை வங்கக் கடலில் தூக்கி எறி வோம் என்றும் கடுமையாக விமர் சித்து வரும் அவர்,
தற்போது, பல வேஷம் போடுபவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்றும் சாடி யுள்ளார். பிப்ரவரி 5-ஆம் தேதி பிர தமர் மோடியுடன் ராமானுஜர் சிலைத் திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொள்ளவிருக்கும் நிலையிலும் தயவுதாட்சண்மின்றி இந்த விமர் சனத்தை அவர் வைத்துள்ளார். “தேர்தல் நேரம் என்றால் தாடி யை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்றுவது; தமிழகம் என் றால் வேட்டி கட்டுவது; பஞ்சாப் தேர்தல் என்றால் தலைப்பாகை அணிவது; மணிப்பூரில் மணிப்பூரி தொப்பி; உத்தரகண்டில் அந்த ஊரில் தொப்பி அணிவது… இப்படி எத்தனை தொப்பிகளைத்தான் மோடி அணிவார்? அவர் என்னதான் செய்கிறார்? இந்த மாதிரியான வித்தைகளால் நாட்டுக்கு என்ன கிடைக்கும்?” என்று சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “சமூக ஊடக நிர்வா கத்தின் மூலம், அப்பட்டமாக பொய் களை கூறி, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, மக்களை முட்டாளாக் கப் பார்ப்பதாகவும், வெறுப்பு மற் றும் பிரிவினையின் வகுப்புவாத அரசியலை பாஜக தலைவர்கள் விளையாடுகிறார்கள்” என்றும் சாடியுள்ளார்.