ஒமைக்ரான், கொரோனா பாதிப்பு எதிரொலி கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள்!
புதுதில்லி, ஜன.6- இந்தியப் பங்குச் சந்தை கள், வியாழனன்று கடும் சரி வைச் சந்தித்துள்ளன. கடந்த வாரம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்த இந்தியப் பங்குச் சந்தைகள், நடப்பு வர்த் தக வாரத்தின் முதல் மூன்று நாட்கள் நிலையான ஏற்றத்தில் சென்றது. இதனால் முதலீட்டா ளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர். இந்நிலையில், வர்த்தக வாரத்தின் 4-ஆவது நாளான வியாழனன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீடான ‘சென் செக்ஸ்’ 621.31 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தைக் குறி யீடான ‘நிப்டி’ 179.35 புள்ளி களும் சரிந்து, முதலீட்டாளர் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்செக்ஸ் குறியீடு காலையில் 200 புள்ளிகள் சரி வில் ஆரம்பித்து, ஒருகட்டத்தில் 850 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது. இந்த சரிவு மூலம், கடந்த ஒரு வாரம் பெற்ற மொத்த வருமானத்தையும் முதலீட்டாளர்கள் இழந்துள்ள னர். இந்தியா முழுவதும் அதி கரித்து வரும் ஒமைக்ரான் மற் றும் கொரோனா பாதிப்புகள்… அதனையொட்டி மாநில அரசு கள் அடுத்தடுத்து அறிவித்து வரும் பொதுமுடக்கக் கட்டுப் பாடுகள் மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கைகள் ஏற் படுத்திய தாக்கமே பங்குச் சந்தைகள் சரிவுக்கு காரணம் என்று கருதப்படுகிறது.