ஒன்றிய பாஜக அரசு என்றால் பொய், ஆணவம், பணவீக்கம்
லக்னோ, நவ. 17 – உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் வார்த்தைப்போர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆசம்கர் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ‘JAM’ அல்லது ஆதித்யநாத்தின் ‘JAM’ ஆகிய இரண்டில் எதை தேர்வு செய்வீர்கள்? என்ற கேள்வியை மக்கள் முன்பு வைத்தார். மேலும், அகிலேஷ் சொல்லும் ‘JAM’: M- (முகமது அலி ஜின்னா), A- ஆசம் கான் (சமாஜ்வாதி மூத்த தலைவர்), M- (முக்தார் – ஜெயில் மாபியா கும்பல் தலைவர் மற்றும் எம்எல்ஏ முக்தார் அன்சாரி) என அமித் ஷா விளக்கமும் அளித்தார். அதேநேரம், யோகி ஆதித்யநாத்தின் ‘JAM’ என்றால், J- (ஜன் தன் வங்கி கணக்கு), A- (ஆதார் கார்டு), M- (Mobile- ஊழலை வேரோடு அழிக்க ஒவ்வொருவருக்கும் செல்போன்) என்று கூறினார். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளன்று, இந்திய தலை வர்களான காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் தலைவர்களோடு இணைத்து முகம்மது அலி ஜின்னாவின் பெயரையும் அகிலேஷ் குறிப்பிட்டிருந்தார். இதனை மனத்திற் கொண்டே மறைமுகமாக அமித்ஷா சாடியிருந்தார். இந்நிலையில் அகிலேஷ் தற்போது பாஜக-வுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், பாஜகவின் ‘JAM’ என்பது, J (Jhooth) பொய், A (ahankaar)- ஆணவம், M (mehengai)- பணவீக்கம் ஆகி யவைதான் என்று குறிப்பிட்டு தாக்கியுள்ளார்.