ஒஎன்ஜிசி நிறுவன சூறையாடலை துவங்கியது பாஜக அரசு!
புதுதில்லி, நவ. 26 – அரபிக்கடலில் அமைந்துள்ள மும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரி வாயு வயல்களை வெளிநாட்டு நிறு வனத்திற்கு தாரை வார்க்கும், பெட் ரோலிய அமைச்சகத்தின் பரிந்துரை க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 2021 அக்டோபர் 29 முதல் 31 வரை உதய்பூரில் உள் வியூகக் கூட்டத்தை ஓஎன்ஜிசி நடத்தியதாகவும், இதில், 25 ஆண்டுகளுக்கான ஆற்றல் முன் னோக்கு திட்டம், 15 ஆண்டுகால ஆய்வுத் திட்டத்தை உருவாக்குதல் தொடர்பான பரிந்துரைகள் பெறப் பட்டதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.
எண்ணெய் ஆய்வின் பரப்பள வை அதிகரிப்பதும், மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதுமே பரிந்துரைகளின் பொதுவான நோக்கம் என்று கூறப் பட்டாலும், தனியார்மயத்தை நோக்கிச் செல்வதே இதன் பின்னுள்ள சூட்சமம் ஆகும். அதற் காகத்தான், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில் அதிக உற்பத்திக் கிணறுகளைத் தோண்டு வதற்கும் மற்றும் சிறந்த மேலா ண்மையை ஏற்படுத்துவதற்கும், தனியார் துறை நிறுவனங்களை பங்குதாரர்களாகவோ அல்லது பல்வேறு வணிக மாதிரிகளாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, மும்பை கடற்கரை யையொட்டி, அரபிக்கடலில் அமைந்துள்ள- ஓஎன்ஜிசி நிறு வனத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை வெளி நாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்க பெட்ரோலிய அமைச்சகம் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
இது ஓஎன்ஜிசி ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக் கிறது. ஓஎன்ஜிசி-யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகங் களின் சங்கம் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. 17 ஆயிரம் அதிகாரிகளைக் கொண்ட இந்த சங்கம், மும்பை எண்ணெய் கிணற்றின் 60 சதவிகித பங்குகள் மற்றும் செயல்படுத்தும் உரிமத்தை வெளிநாட்டு நிறு வனங்களுக்கு வழங்குவதற்கு எதி ராக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளது. “கச்சா எண்ணெய் இறக்குமதி யை குறைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவது என்ற அரசாங்கத்தின் நோக்கத்துடன் நாங்கள் முழுமையாக இணை கிறோம். ஆனால் அதற்காக, ஓஎன் ஜிசி நிறுவனத்தை தனியாருக்கு தரு வதற்கு பதிலாக, தற்போதைய நிர்வாக முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை வர லாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி யடைந்த போதும், ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கிணறுகளை ஓஎன்ஜிசி தொடர்ந்து தோண்டி வருகிறது என்பதை கடந்த 3 ஆண்டுகளின் தரவு காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற ஆபத்தான முடிவுகளை நிச்சயம் தனியார் நிறுவனத்தினர் எடுக்க முன்வர மாட்டார்கள். எனவே, தனி யாருக்கு தாரை வார்ப்பதற்குப் பதி லாக விரைவான முடிவெடுக்கும் அதி காரம் உள்ளிட்ட சலுகைகளை ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு வழங்கும் பட்சத்தில் இப்போதைய நிலையை காட்டிலும் அதிகளவில் உற்பத்தி யை பெருக்கலாம்” என அதிகாரி கள் சங்கம் கூறியுள்ளது.
“ஓஎன்ஜிசியின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வயல்களை தனியாருக்குத் தரும் எண்ணெய் அமைச்ச கத்தின் முன்மொழிவு, அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்துவ தாகும்” என்று முன்னாள் அதிகாரி இ.ஏ.எஸ்.சர்மா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். “அரசாங்கம் பிறப்பித்த உத்த ரவை அமல்படுத்தினால், அது கார்ப்பரேஷனின் மிக மதிப்புமிக்க சொத்துக்களை பறிப்பதற்கும், தேசத்தை கட்டியெழுப்புவதில் அதன் பங்களிப்பை முடக்கு வதற்கும் துணைபோவது ஆகும்” என்று சர்மா குறிப்பிட்டுள்ளார். 1974 இல் கண்டுபிடிக்கப்பட்ட மும்பை எண்ணெய்க் கிணறு மற்றும் 1988 இல் உற்பத்தி செய்யப்பட்ட பி அண்ட் எஸ் (Mumbai High and Bassein & Satellite – B&S) ஆகியவை எண் ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ONGC) முக்கிய சொத்துக் கள் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப் படும் ஹைட்ரோகார்பன் ஆனது, ஓஎன்ஜிசியின் மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதமாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஹைட்ரோகார்பன் உற் பத்தி அளவில் 40 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது.