விளையாட்டு
ஐபிஎல் விளம்பரதாரராக டாடா நிறுவனம்
கொரோனா வழிவிட்டால் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் – ஏப்ரல் மாத இடைவெளியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. கடந்த சீசனில் விளம்பரதாரராக இருந்த சீனாவின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ‘விவோ’ நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், டாடா நிறுவனம் புதிய விளம்பரதாரராக களமிறங்க உள்ளதாக தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். எனினும் ஒப்பந்த தொகை, எத்தனை ஆண்டுகள் ஒப்பந்தம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.