ஐடி நிறுவனங்களின் முதல் தேர்வு சென்னை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,நவ.26- தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சிதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு- 2021 வெள்ளியன்று (நவ.26) தொடங்கியது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என். நேரு, தகவல் மனோ தங்கராஜ், தகவல் தொழில் நுட்பத்துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல், இந்திய மென்பொருள் தொழில் நுட்பப் பூங்கா இயக்குநர் டாக்டர் சஞ்சய் தியாகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற முதவ்வர் மு.க.ஸ்டா லின் பேசும்போது, “கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, பொழுதுபோக்குத் துறை, வங்கித் துறை, பாதுகாப்புத் துறை – இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அது தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டி ருக்கிறது.
எனவே இதை ஒரு துறையின் மாநாடாகப் நாம் பார்க்க முடியாது. அனைத்துத் துறைகளினுடைய மாநாடாக இதை நாம் கருத வேண்டும்” என்றார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வுசெய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சி. தகவல் தொழில்நுட் பத்துக்காக, தனித் துறையை 1998-ஆம் ஆண்டு உருவாக்கிய ஆட்சியும் திமுக ஆட்சிதான் என்றும் முதலமைச்சர் கூறினார். உற்பத்தித் திறனின் வலுவான முதுகெலும்பில் தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்திச் சேவை மையமாகவும் உருவெடுத்திருக்கிறது. தகவல் தொழில் ்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.