ஏப்ரல் 12: விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசாங்கத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்
விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்தும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ 600/- வழங்கிடவும், வேலை அட்டை தொழிலாளர்களுக்கு வேலை வழங்க தேவையான நிதியொதுக்கம் செய்யவும் வலியுறுத்தி,
ஏப்ரல் 12 தமிழ்நாடு முழுவதும் கண்டன முழக்கம் – ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
சங்கத்தின் மாவட்டக் குழுக்கள், இடைநிலைக் குழுக்கள், கிராம சங்க அமைப்புகள் அனைத்தும் உடனடியாக கூடி, கண்டன முழக்க இயக்கம் வெற்றிகரமாக நடைபெற திட்டமிட்டு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்!
உரிமை முழக்கம் திக்கெட்டும் எதிரொலிக்கட்டும்!
நாடாள்வோர் கவனம் நமது பக்கம் திரும்பட்டும்!
கோரிக்கைகளை ஏற்கும் ஜனநாயக வழிமுறை எனில் வரவேற்போம். ஆனால், அடக்கிவிடலாம் என்ற எதிர்மறை நடவடிக்கை எனில் எதிர் கொள்வோம்…
முறியடித்து முன்னேறுவோம்!
பயனுள்ள தகவல். நற்பணி தொடரட்டும்.