ஏஐடியூசி தமிழ் மாநில 20வது மாநாடு: மாநில தலைவர் – எஸ் காசி விஸ்வநாதன், பொதுச் செயலாளர் – ம இராதாகிருஷ்ணன்
ஏஐடியூசி 20வது தமிழ் மாநில மாநாடு நெல்லை கொக்கிரக்குளம் ரோஸ் மஹால் குருதாஸ் தாஸ்குப்தா நகர் ஆர்.ஏ. கோவிந்தராஜன் நுழைவு வாயில் ஜி.மணியாச்சாரி நினைவரங்கில் டிச.01 அன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் முதல் நாள் சமர்ப்பிக்கப்பட்ட பொதுச் செயலாளர் அறிக்கை மீதான விவாதம் மாநாட்டின் இரண்டு மற்றும் மூன்றாம் நாளான இன்றும் (03.12.2022) நடைபெற்றது.
மாநாட்டின் இரண்டாம் நாள் மாலையில் பரிக்ஷ குழுவினரின் ‘பலூன்‘ விமர்சன நாடகம் நடைபெற்றது.
மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று, விவாதத்தின் நிறைவாக, மாநாட்டுப் பிரதிநிதிகள் பொதுச் செயலாளர் அறிக்கையை ஒருமனதாக ஏற்றனர். பல்வேறு முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தீர்மானங்கள் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
மாநாட்டு நிறைவு நாளான இன்று புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஏஐடியூசி தமிழ்நாடு மாநில தலைவராகத் தோழர் எஸ் காசி விஸ்வநாதன், மாநில பொதுச் செயலாளராகத் தோழர் ம இராதாகிருஷ்ணன், மாநில பொருளாளராக தோழர் பி பீட்டர் துரைராஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தீர்மானங்கள் விரைவில் முழு விவரங்களுடன் பிரத்யேகமாக பிரசுரம் செய்யப்படும்.
இன்று மாலை (03.12.2022) 5 மணியளவில் பாளையங்கோட்டை மரியா கேண்டீன் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பு மற்றும் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. பேரணியின் முடிவில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில், தோழர் எஸ் எஸ் தியாகராஜன் நினைவரங்கத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கேரள அரசாங்கத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் செயலாளர் இரா. முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன், ஏஐடியூசி தேசிய செயலாளர்கள் டி எம் மூர்த்தி, வஹிதா நிஜாம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணை செயலாளர் ந பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.