எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையில் முறைகேடு
சென்னை, டிச. 21- எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞர் அசோக் குமார் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவ லகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி தொகையில் 17 கோடி ரூபாய் சில அரசு அதிகாரிகள் 52 கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து அபகரித்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடந்த தாகவும் புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு காவல் துறை ஆய்வாளர் வேணுகோபால் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கின் அடிப்படையில் 52 கல்லூரிகளின் பெயர் விவரங்களை சேர்த்து அதனுடைய முதல்வர்களிடம் விசாரணை நடத்தப் போவதாக தெரிவித்திருந்தார். 52 கல்லூரி முதல்வர்கள் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டது. அதனடிப் படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத்துறை அலுவலகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 6 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகள் செவ்வாயன்று (டிச. 21) ஆஜராகினர். இந்த விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரியின் முதல்வர்க ளிடம் நடத்தப்படும் விசாரணையை வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதில் எத்தனை அரசு அதிகாரிகள் சிக்கு வார்கள், எத்தனை பேர் கைது செய்யப் படுவார்கள் என்ற முழு விவரங்கள் விசாரணையின் இறுதியில் தெரிய வரும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.