எதிர்க்கட்சியினரை சுட்டு விடாதீர்கள் கட்டை, செருப்பால் அடியுங்கள்!
கான்பூர், ஜன.27- உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கிரி மினல் பின்னணி கொண்டவர் களையே பாஜக அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்தி யுள்ளது. பாஜக முதற்கட்டமாக அறி வித்த 107 வேட்பாளர்களில் தற்போதைய துணை முதல் வர் கேசவ் பிரசாத் மவுரியா உட்பட 25 பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் பாபு லால் என்ற பாஜக வேட்பாளர் மீது மட்டும் அதிகபட்சமாக 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில்தான், எதிர்க் கட்சி வேட்பாளர்களை கட்டை, செருப்பால் அடியுங்கள்.. துப் பாக்கியால் மட்டும் சுட்டுவிட வேண்டாம் என்று கான்பூர் பாஜக எம்எல்ஏ மகேஷ் திரி வேதி வன்முறையைத் தூண்டி யுள்ளார்.
கித்வாய் நகர் தொகுதி யில் காணொலி முறையில், தமது ஆதரவாளர்கள் மத்தி யில் மகேஷ் திரிவேதி பேசி யுள்ளார். அப்போது, “கொடுங் கோலர்கள், ஒருசார்பாக பேசு பவர்கள், அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்பவர்கள், இவர்களை எல்லாம் தடி மற்றும் செருப்பால் அடி யுங்கள்.. ஆனால், துப்பாக்கி யால் மட்டும் சுட வேண்டாம். மற்ற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வெறியைத் தூண்டி யுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளி யாகி இருக்கும் நிலையில், “மகேஷ் திரிவேதியின் பேச்சு, பாஜக-வின் உண்மை யான முகம் மற்றும் குணத்தை காட்டுகிறது” என்று சமாஜ் வாதி கட்சி விமர்சித்துள்ளது.