எங்கே எனது வேலை? பிரச்சார பயண குழுவினருக்கு செங்கல்பட்டு மாவட்ட ஏஐடியுசி வரவேற்பு….
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் எங்கே எனது வேலை? முழக்கத்தினை முன்வைத்து மாவீரன் பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23 -ல் தமிழகத்தின் சென்னை, ஓசூர், வேதாரண்யம், மற்றும் குமரிமுனை யிலிருந்து 4 அணிகளாக புறப்படும் பிரச்சார பரப்புரை பேரியக்கம் தோழர் பாலதண்டாயுதம் பிறந்த ஏப்ரல் 2-ல் திருச்சியில் ஒன்றிணைந்து இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநில தலைவர் தோழர் தினேஷ் சீரங்கராஜ் தலைமையில் சென்னையிலிருந்து புறப்பட்ட எங்கே எனது வேலை? பிரச்சார பேரியக்க அணியினர் மார்ச் 24 -ல் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும், தாம்பரத்தில் தோழர் ஜீவா சிலை கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பிரச்சார பரப்புரை செய்தார்கள்.
மாவட்ட ஏஐடியுசி சார்பில் பொதுச்செயலாளர் தோழர் M.ஜஹாங்கீர் தலைமையில் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் பயண குழுவினருக்கு உள்ளாட்சி, ஆட்டோ, செக் பாயிண்ட் மற்றும் ஆலை தொழிலாளர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சங்கம் சார்பில் அளித்த பயண நிதியாக ரூபாய் 10000 / – வழங்கப்பட்டது.
சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர். A.ராஜ்குமார், ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர். M. சங்கையா , மாநில செயலாளர் .V. ஆதி மூலம், அமைப்பு நிலை செயலாளர் தோழர் .P.ரவிச்சந்திரன், உள்ளாட்சி சங்க தலைவர் ஆர். தேவராசன், செயலாளர் A.வரதன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தோழர்.க.ஜெகதீசன், துணைச்செயலாளர் M. சுப்பிரமணி, செக் பாயிண்ட் தொழிற்சங்க செயலாளர் V. உமாபதி, மாவட்ட பொருளாளர் S.ராஜா மற்றும் தோழர்கள் நகர எல்லையிலிருந்து வரவேற்று பேரணியாக சென்று பிரச்சார பரப்புரை செய்தார்கள்.
திருக்கழுக் குன்றத்தில் கல்பாக்கம் அணுசக்தி ஊழியர் சங்கத்தினர் தலைவர் C. சின்ன கோவிந்தன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்க பொதுச்செயலாளர் தோழர் கருணாமூர்த்தி. பொருளாளர் P.பரத் ,செயலாளர் P.ஏழில் மற்றும் சங்க நிர்வாகிகளும், திருக்கழுக்குன்றம் உள்ளாட்சி சங்க தொழிலாளர்களும் பெருவாரியாக கலந்துகொண்டு பரப்புரை செய்தார்கள். மேலும் மாவட்டத்தில் பயண குழுவினர் பரப்புரை செய்த வல்லஞ்சேரி, ஆமூர், தண்டலம், பஞ்சந் திருத்தி, மானாமதி மற்றுமுள்ள பகுதிகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது.
திருப்போரூரில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பயணக்குழு தோழர்கள்.தினேஷ், மணிகண்டன், மற்றும் ஏஐடியுசி பொதுச் செயலாளா் M.ஜஹாங்கீர், ஆட்டோ சங்க செயலாளர் க.ஜெகதீசன் ஆகியோர் விளக்கியுரை ஆற்றினார்கள்.