ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 85-ஆவது இடம்!
புதுதில்லி, ஜன.27- உலக ஊழல் நாடுகளின் தரவரி சையில் இந்தியா 85-ஆவது இடத்தில் இருப்பது, ‘டிரான்ஸ் பரன்சி இண்டர்நேசனல்’ ஆய்வ றிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மன் தலைநகர் பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ (Transparency International) நிறுவனம் ஒவ் வொரு ஆண்டும் ‘உலகளாவிய ஊழல் நாடுகளின் பட்டியலை’ (Global Corruption Index) வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான ஊழல் புல னாய்வுக் குறியீட்டை (corruption perception index -CPI) வெளி யிட்டுள்ள ‘டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்’, அதில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக கூறி யுள்ளது.
லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளைச் சந்திக் காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத் திற்காகப் பயன்படுத்துதல், நிர்வா கத்தில் வாரிசுகளை நியமித்தல், லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக புகாரளிக்கும் நபர்களுக்கு இருக் கும் சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படை யாகக் கொண்டு, ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ ஊழல் நாடுகள் பட்டியலைத் தயாரிக்கிறது. ஜீரோ முதல் 100 வரையிலான மதிப்பெண் கள் கொடுக்கப்பட்டு, இதில், ‘0’ மதிப்பெண் எடுப்பவை அதிகமான ஊழல் நிலவும் நாடுகள் என்றும், 100 மதிப்பெண்கள் எடுப்பவை ஊழ லற்ற நாடுகள் என்றும் தரவரி சைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், 180 நாடுகளை உள்ளடக்கிய 2021-ஆம் ஆண்டுக்கான ‘உலகளாவிய ஊழல் குறியீடு’ பட்டியலில், 40 மதிப்பெண்ணுடன் இந்தியா 85-ஆவது இடத்தில் வந் துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் 86-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறியிருப்பதாக கூறப் பட்டுள்ளது. எனினும், மதிப்பெண் களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு பெற்ற அதே 40 மதிப்பெண் களையே தற்போதும் பெற்றுள் ளது.
இதற்கான காரணங்களையும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ விரிவாக குறிப்பிட்டுள்ளது. “உலகளாவிய ஊழல் குறி யீட்டில், இந்தியாவின் நிலை குறிப் பாக கவலையளிக்கிறது. கடந்த பத் தாண்டுகளாக நாட்டின் மதிப்பெண் கள் தேக்க நிலையில் இருந்தபோதி லும், அடிப்படை சுதந்திரங்கள் மற் றும் நிறுவன கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை சிதைவதால், நாட்டின் ஜனநாயக நிலை குறித்து கவலை கள் நிலவுகின்றன. இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் சிவில் சமூக அமைப்புகளின் பாதுகாப்பு சிக்க லாக உள்ளது. அவதூறு, தேசத்துரோ கம், வெறுப்பு பேச்சு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மற் றும் வெளிநாட்டு நிதியுதவி மீதான கட்டுப்பாடுகள் என சிவில் சமூக அமைப்புகள் குறிவைக்கப்படு கின்றன.
குறிப்பாக பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆபத்தில் உள்ள னர். அவர்கள் காவல்துறை, அரசி யல் அதிகாரம் படைத்தவர்கள், கிரி மினல் கும்பல்கள் மற்றும் உள்ளூர் ஊழல் அதிகாரிகளின் தாக்குதல் களால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ னல்’ தெரிவித்துள்ளது. இந்தியா 40 மதிப்பெண்களைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா வின் அண்டை நாடுகளான சீனா 45 மதிப்பெண்களையும், இலங்கை 37 மதிப்பெண்களையும், நேபாளம் 33 மதிப்பெண்களையும், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் 28 மதிப் பெண்களையும், வங்கதேசம் 26 மதிப்பெண்களையும் பெற்றுள் ளன. ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி போன்ற நாடு கள் முதல் 10 இடங்களுக்குள் வந் துள்ளன. இங்கிலாந்து 11-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங் 76 மதிப்பெண்களுடன் 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெ ரிக்கா 27-ஆவது இடத்தை பிடித் துள்ளது. கம்போடியா (23), ஆப்கா னிஸ்தான் (16), வடகொரியா (16) ஆகிய நாடுகள் கடைசி இடங்க ளைப் பெற்றுள்ளன.