ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகார உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு அரசு, ஊரக உள்ளாட்சிகளின் நிதி அதிகார வரம்பை உயர்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் கிராம ஊராட்சிகள் ரூ.5 லட்சம் வரையிலும், ஒன்றிய ஊராட்சிகள் ரூ.25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகள் ரூ.50 லட்சம் வரையிலுமான திட்டப் பணிகளை, அந்த அமைப்புகள் நிறைவேற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளின் வருவாய் வாய்ப்பு மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி அளவை நிர்ணயித்து இருக்கலாம். எனினும், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டப் பணிகளை அரசின் துறை அலுவலர்களின் அனுமதிக்காக காத்து நிற்கும் காலம் குறையவும், பணிகள் விரைந்து மேற்கொள்ளவும் நிதி அதிகார வரம்பை உயர்த்திய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.