இந்தியா

உ.பி.யில் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் பாஜக..?

லக்னோ, ஜன.11- உத்தரப் பிரதேசத்தில் அகிலே ஷின் சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பதாகவும், சமாஜ்வாதி 35 சதவிகிதம் வாக்குகளை பெற் றால், அது பாஜக-வின் தோல்விக்கு வழிவகுத்து விடும் என்று ‘ஏபிபி- சி வோட்டர்’ (ABP – CVoter Survey) நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள் ளது. சமாஜ்வாதி கட்சிக்கான ஆதரவு அதிகரிக்கும் அதேநேரத்தில், பாஜக-வின் ஆதரவு குறைந்து கொண்டே போவதாகவும் ‘ஏபிபி- சி வோட்டர்’ சர்வே குறிப்பிட்டுள் ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 10-இல் துவங்கி, மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலை யில், ‘ஏபிபி- சி வோட்டர்’ (ABP – CVoter Survey) நிறுவனங்கள், உ.பி. தேர்தல் தொடர்பான தங்களின் 5-ஆவது கருத்துக் கணிப்பை வெளி யிட்டுள்ளன. இதில், 2022 ஜனவரி மாத கணிப்பில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 223 முதல் 235 இடங்க ளும் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதி கட்சிக்கு 145 முதல் 147 இடங்க ளும் கிடைக்கும் என்று கூறியுள்ளன.

தற்போதை நிலவரப்படி பாஜக-வுக்கு 41.5 சதவிகித வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு 33.3 சத விகித வாக்குகளும் கிடைக்க வாய்ப் புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கான வாக்கு சதவிகிதம் ஏறுமுகத்தில் உள்ள தால், இந்த சதவிகிதம் 35-ஐ தொட் டால் அது பாஜக-வின் தோல்விக்குக் கூட வழிவகுக்கலாம் என்று ‘ஏபிபி – சிவோட்டர்’ சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 5 மாதங்களில் பாஜக-வின் ஆதிக்கத்தில் ஏற்பட்டு வரும் அரிப்பு, அதேநேரம் சமாஜ்வாதிக்கு அதிகரிக்கும் செல்வாக்கு பற்றிய புள்ளிவிவரங்களையும் ‘ஏபிபி – சிவோட்டர்’ ஒப்பிட்டுக் காட்டியுள் ளது. கடந்த 2021 செப்டம்பரில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணி 259 முதல் 267 இடங்க ளும், சமாஜ்வாதி கூட்டணி 109 முதல் 117 இடங்களும் பெறும் என்று தெரிய வந்தது. இது அக்டோபரில் பாஜக கூட்டணிக்கு 241 முதல் 249 இடங் கள், சமாஜ்வாதி கூட்டணிக்கு 130 முதல் 138 இடங்கள், நவம்பரில் பாஜக கூட்டணிக்கு 213 முதல் 221 இடங்கள், சமாஜ்வாதி கூட்ட ணிக்கு 152 முதல் 160 இடங்கள், டிசம்பரில் பாஜக கூட்டணிக்கு 212 முதல் 224 இடங்கள் சமாஜ்வாதி கூட்ட ணிக்கு 151 முதல் 163 இடங்கள், ஜனவரியில் பாஜக கூட்டணிக்கு 223 முதல் 235 இடங்கள் சமாஜ் வாதி கூட்டணிக்கு 145 முதல் 157 இடங்கள் என்று மாறிமாறி வந் துள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக இழப்பைச் சந்தித்துள்ளது.

சமாஜ்வாதியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதாவது, செப்டம்பரில் 109 இடங்களில் இருந்து ஜனவரியில் சுமார் 160 இடங்கள் என 5 மாதங்க ளில் சுமார் 50 இடங்கள் சமாஜ்வாதி கட்சிக்கு உயர்ந்துள்ளது. மறுபுறம் பாஜக-விற்கான இடங்கள் இதே காலத்தில் 267 இடங்களில் இருந்து 235 இடங்களாக குறைந்துள்ளது. 5 மாத இடைவெளியில் 32 இடங் களை பாஜக இழந்துள்ளது. பாஜகவுக்கு 41.5 சதவிகிதமும், சமாஜ்வாதிக்கு 33.3 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்று கணிக் கப்பட்டுள்ள நிலையில், சமாஜ் வாதிக்கான வாக்குகள் 35 சதவிகித மாக அதிகரிக்கும் பட்சத்தில், அது பாஜகவின் தோல்விக்கு வழிவகுத்து விடும் ‘ஏபிபி – சிவோட்டர்’ குறிப் பிட்டுள்ளது. அதேநேரம் இந்த 2 சதவிகித வாக்குகளை சமாஜ்வாதி பெறுவது கடினம் என்றும் அது தெரி வித்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 இடங்க ளும், காங்கிரசுக்கு 7 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்த கணிப்பில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button