இந்தியா
உலக நிதி மூலதனத்தின் கருவி ரிஷி சுனக் -கே.சுப்பராயன்
எந்த ஒரு தனிமனிதனையும், எந்த ஒரு அமைப்பையும் மதிப்பீடு செய்கிறபோது, என்ன அளவுகோலைப் பொருத்திப் பார்க்க வேண்டும்?
அவரோ, அல்லது அந்த அமைப்போ மனித சமூகத்தின்பால், என்ன கொள்கையைக் கொண்டுள்ளனர் என்பதே முதன்மையான அளவுகோலாகும்!
அந்த அளவுகோல் கொண்டு பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தின் புதிய பிரதமரை அளந்தால், அவர், ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை உலகில் நிலைநிறுத்துகிற,
உலக நிதி மூலதனத்தின் கருவி என்பது புலனாகும்!
இவர் இந்து, இந்திய வம்சாவளி, வெள்ளையனை இந்து ஆள்கிறான் என்பதெல்லாம் கானல்நீர் காட்சி காட்டுவதாகும்!
இது முதலாளித்து சமூகத்தின் இயல்பான மடைமாற்றும் பித்தலாட்டமாகும்!