உலக அமைதிக்கான தொழிற்சங்க நடவடிக்கை தினம்
உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளன (World Federation of Trade Union – WFTU) அறைகூவலுக்கு இணங்க, உலக அமைதி தினத்தை முன்னிட்டு, ‘உலக அமைதிக்கான தொழிற்சங்க நடவடிக்கை தினம்’ நேற்று (01.09.2022) மாலை சென்னை ஆவடியில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை திருவள்ளூர் மாவட்ட AITUC ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர். மயில்வாகனன் தலைமை வகித்தார். WFTU வின் துணைப் பொதுச் செயலாளர் தோழர். சி.ஸ்ரீகுமார், போருக்கு எதிராகப் பாதிக்கப்படும் உலகத் தொழிலாளர்கள் அணி திரண்டு போராட வேண்டிய அவசியத்தையும், உலக அமைதியைச் சீர்குலைக்கும் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு கலைக்கப் பட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு கூட்டத்தின் நோக்க உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொ. மு.ச பேரவை மற்றும் எச்.வி.எப் நிர்வாகிகள் முறையே தோழர்.முகமது மீரா மற்றும் முரளி ஆகியோரும் உரை ஆற்றினர். AIDEF மூத்த தோழர் என்.ஜே. ராமன் நிறைவுரை ஆற்றினார்.
பாதுகாப்புத் துறை நிறுவனங்களான OCF, HVF, EFA, CVRED, OD மற்றும் கட்டுமான, ஆட்டோ தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (Coordination Committee of Trade Unions-CCTU) கன்வீனர் தோழர். பாஸ்கர் கூட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி, உரை நிகழ்த்தினார்.