உமர் அப்துல்லா குற்றச்சாட்டு ஹைதர்போராவில் இந்திய ராணுவம் அப்பாவிகளை சுட்டுக் கொல்கிறது..!
ஸ்ரீநகர், நவ. 19 – கடந்த நவம்பர் 15 அன்று ஹைதர்போரா பகுதியில் செயல்படும் கால் சென்டர் ஒன்றில் நான்கு தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய ராணுவத்தினர் ரகசிய துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அல்தாப் அகமது பட், டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, ஹைதர் (எ) பிலால் பாய் ஆகிய 4 பேர் இறந்து போன நிலையில், அவர்களின் உடல் களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் பாதுகாப்புப் படையினரே, குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்தவாரா பகுதியில் அடக்கம் செய்தனர். ஆனால், இறந்தவர்களில் டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, அல்தாப் அகமது பட் ஆகிய மூவருக்கு, தீவிர வாத குழுவினருடன் எந்தவித தொடர்பு மில்லை என்று சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காஷ்மீரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூவரின் உடல்களையும் தங்களிடம் ஒப்படை க்க வேண்டும் என்று வலியுறுத்தி வரு கின்றனர்.
கட்டடத்தின் உரிமையாளர் அல்தாப் அகமது துப்பாக்கிச்சூட்டில் தவறு தலாக சுட்டுக் கொல்லப்பட்டதை காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டி ருந்தாலும், மற்றவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி வருகிறார். இக்குற்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நவம்பர் 15 அன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். “இக்குற்றம் தொடர்பாக சுயா தீனமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை விரைவுபடுத்த வேண்டும்” என்று குப்கார் மக்கள் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு உமர் அப்துல்லா கடிதமும் எழுத உள்ளார்.