உக்ரைன் போர்: சப்போரியா (Zaporizhzhia) அணுமின் நிலையத்தை ரஷ்யப் படை கைப்பற்றியது!
உக்ரைன் நாட்டின் அணுமின் ஒழுங்காற்று அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள தகவல்படி, ரஷ்ய இராணுவத்தினர் சப்போரியா (Zaporizhzhia) நகரில் உள்ள அணுமின் நிலையத்தை இன்று(04.03.2022) தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று சமூக வலைதளங்கள் மற்றும் ஊடங்கங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும். ரஷ்ய குண்டு வெடிப்புக்குப் பின் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இந்த அணுமின் நிலையத்தின் பல அலகுகளில் சேதங்கள் ஏற்பட்டிருப்பினும் கதிர்வீச்சின் அளவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இரு தலைவர்களும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலவரம் குறித்து பேசியுள்ளனர்.