உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்வு
தூத்துக்குடி,மார்ச் 11 உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. எனவே சட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார். திருச்சியில் மே மாதம் 5-ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ரஷ்யா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எண்ணெயை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமென அரசு உத்தர விட்டுள்ளது
ஜிஎஸ்டி
அரசின் சட்டங்களால் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிப்புகளை சந்தித்து வரு கின்றனர். எனவே சட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கா மல் விற்பனை செய்வதன் மூலம் உற்பத்தி யாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், பொது மக்களுக்கும் குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்ய முடியும். ஜி.எஸ்.டி. வரி அடிக்கடி உயர்த்தப்படுவதால் பொருட்கள் விலையும் தாறுமாறாக உயர்கிறது. இதற்கு கார ணம் வியாபாரிகள்தான் என தவறான தகவல் கள் பரப்பப்படுகிறது. எனவே ஜி.எஸ்.டி.யை சரியான நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
3 விதமான விலைகள்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பொ ருட்களை 3 விதமான விலைகளில் விற்பனை செய்கின்றனர். சிறிய மளிகை கடைகளுக்கு ஒரு விலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு ஒரு விலை, மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஒரு விலை என விற்பனை செய்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டுகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சிறிய மளிகை கடை வியாபாரிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஒரே மாதிரியான விலையை அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு ஒரே மாதிரியான வாடகை முறையை கொண்டு வரவேண்டும். மாதம் தோறும் ஆட்சியர் தலைமையில் வணி கர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும். மே மாதம் 5-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் தமிழ கம் முழுவதும் இருந்து 10 லட்சம் வியாபாரி கள் பங்கேற்பார்கள். அன்று கடைகள் அடைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.