இஸ்ரேலின் உளவு வலைப்பின்னல் தகர்ப்பு
பெய்ரூட், பிப்.4- கடந்த சில வாரங்களில் லெபனான் மேற்கொண்ட நடவடிக்கை களால் இஸ்ரேலின் 15 உளவுக்குழுக்களின் இணைப்பு தகர்க்கப் பட்டுள்ளது. இஸ்ரேலின் உளவுப்பிரிவு பெரும் அளவில் மேற்கு ஆசிய நாடு களில் ஊடுருவியுள்ளது. குறிப்பாக, லெபனான், சிரியா உள்ளிட்ட நாடு களில் பெரும் வலைப்பின்னலை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. இதைத் தகர்க்க திட்டமிட்ட லெபனான் ராணுவம் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரிய எதிர் நடவடிக்கைக்குத் திட்டமிட்டது. இந்த எதிர் நடவடிக்கை பெரும் அளவில் பலன் தந்துள்ளதாக லெபனானின் அல் அக்பர் என்ற செய்தித்தாளில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
லெபனானில் பல உளவுக்குழுக்களை இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது. அதில் 15 குழுக்களின் செயல்பாடுகளை முடக்கி, அக்குழுக்களைக் கலைக்கும் வகையில் லெபனான் ராணுவம் நட வடிக்கை எடுத்திருக்கிறது. முதலில் ஒவ்வொரு குழுவையும் பிற குழுக் களிடமிருந்து தொடர்பில்லாமல் செய்து விட்டு, 15 குழுக்களையும் கலைக்கும் நிலையை உருவாக்கி விட்டார்கள். இக்குழுக்களில் சில குழுக்கள் சிரியாவில் செயல்பட்டு வந்தவையாகும். அல் அக்பர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த இஸ்ரேலின் உளவு வலைப்பின்னலுக்கு எதிரான நடவடிக்கை நான்கு வாரங்க ளுக்கு முன்பு துவக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நடவடிக்கை யை 2009 ஆம் ஆண்டிலும் நடத்தினார்கள். அப்போது இஸ்ரேலின் மொசாத் உளவுப்பிரிவின் குழுக்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன.
அதன்பிறகு, தற்போதுதான் பெரும் அளவிலான எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உளவுக்குழுக்கள் மூலமாகத்தான் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதில் இணைந்திருந்த சிலர் எந்தக் காரணத்திற்காக அந்த தகவல்கள் பரிமா றப்படுகின்றன என்பது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். இந்த உளவு வேலையில் ஈடுபட்டிருந்த பலரும் தற்போது சிறைகளில் அடைக் கப்பட்டிருக்கிறார்கள். முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில், இந்த உளவுக்குழுக்கள் பற்றிய செய்திகள் வெளியே செல்லாமல் இருப்பதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது போதை மருந்து தொடர்பான வழக்குகள் போடப்பட்டுள்ளன.