இலங்கையில் மக்கள் எழுச்சி: தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே!
கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் உழைக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்தது. அதனையொட்டி பல அரசியல் மாற்றங்களும் அரங்கேறின. ஆட்சி நிர்வாக மாற்றம் மற்றும் இதர அரசியல் முயற்சிகள் எதுவும் அடிப்படை மாற்றங்களுக்கு வழிவகுக்கவில்லை. இந்தச் சூழலில் மக்கள் எழுச்சி மேலும் பொங்கியெழுந்தது. அதன் விளைவாக, போராட்டக்காரர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு, உள்ளே நுழைந்தனர். மக்கள் எழுச்சிக்கு யார் தான் அணையிட முடியும்?
அரசியல் சூழல் மற்றும் நிகழ்வுகளின் தாக்கத்தை உணர்ந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து நாட்டைவிட்டுப் பறந்துவிட்டார் என்று இலங்கை செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியும் போராட்டங்களும் தொடருகின்றன! மக்கள் எழுச்சி முறைப்படுத்தப்பட்டு, உழைக்கும் மக்களுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதே, பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான தீர்வாகும்!