இறந்த 700 விவசாயிகளின் குடும்பங்களை பாஜக கூட்டணிக்கு அழையுங்கள்…
லக்னோ, ஜன.27- பாஜக கூட்டணியில் இணையு மாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த அழைப்பை, ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) தலைவர் ஜெயந்த் சவுத்ரி நிரா கரித்துள்ளார். “தில்லி போராட்டத்தில் இறந்த 700 விவசாயிகளின் இல் லங்களுக்கு உங்களின் அழை ப்பை அனுப்புங்கள்” என்று அமித் ஷாவுக்கு அவர் பதிலடி கொடுத் துள்ளார். கடந்த 2017-இல் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மேற்கு உத் தரப்பிரதேசத்தில் ஜாட் சமூ கத்திற்கும், இஸ்லாமியர்களுக் கும் இடையே மோதலை ஏற் படுத்தி, அதன்மூலமாக பாஜக ஆதாயம் அடைந்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. ஆனால், கடந்த ஆண்டு ஒன் றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயி கள் மீதான அடக்குமுறைகள், ஜாட் சமூகத்தினர் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், 2022 சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டுமன்றி, ஜாட் சமூ கத்தினரின் வாக்குகளும் அகி லேஷ் கட்சிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. ஜாட் சமூகத்தி னர் மத்தியில் செல்வாக்குள்ள ஜெயந்த் சவுத்ரி தலைமையி லான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி, தற்போது சமாஜ்வாதி கூட் டணியில் இருப்பதும் கூடுதல் பலமாகியுள்ளது. ஏற்கெனவே, இதர பிற்படுத் தப்பட்டோர் மத்தியில் செல் வாக்கு படைத்த 3 அமைச்சர்கள், 9 சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதிக்கு சென்றுவிட்ட நிலையில், ஜாட் ஆதரவும் கேள்விக்குறியாகி இருப்பது பாஜக-வை நெருக்கடியில் தள்ளி யுள்ளது.
இதனால் ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தங்கள் கூட்டணிக்கு வர வேண் டும் என்ற பாஜக தலைவர்கள் தற்போது வெட்கத்தை விட்டு, வெளிப்படையாகவே அழைப்பு விடுக்க ஆரம்பித்துள்ளனர். ராஷ் டிரிய லோக் தளம் தவறான கூட்டணியில் உள்ளது; இப்போ தும் அவர்களுக்கான கதவு திறந்து உள்ளது என்று அமித் ஷாவே நேரடியாக அழைப்பு விடுத்தார். ஆனால், அமித்ஷாவின் இந்த அழைப்பை ஜெயந்த் சவுத்ரி ஒரேயடியாக நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக் கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள ஜெயந்த் சவுத்ரி, “கூட்டணிக்கு என்னை அழைக்காதீர்கள், உங்க ளால் அழிந்த 700 விவசாய குடும்பங்களின் வீடுகளுக்கு உங்களின் இந்த அழைப்பை அனுப்புங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.