இந்தியா
பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவு!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே வருவதால் காலவரையின்றி பள்ளி கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக டெல்லியில் படுமோசமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் மோசமான காற்று மாசால் தலைநகர் டெல்லி தவித்து வருகிறது
இதனை அடுத்து பள்ளி கல்லூரிகளை ஒரு வாரம் மூட சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியில் மோசமான காற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடல் நெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது