‘சாதி, மத பாகுபாடின்றி உத்தரப்பிரதேச பாஜக அரசு செயல்படுகிறது’ : மோடி பாராட்டு
சாதி, மத பாகுபாடின்றி உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் தனித்தனியே களம் காணும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
பிரதமர் மோடி
முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்கள் வளர்ச்சியை தங்களது குடும்பத்துடன் சுருக்கிக் கொண்டார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் உத்தரப்பிரதேசத்தின் கனவுகள் நிறைவேறி வருகிறது என்று மோடி கூறியுள்ளார்.
சாதி, மத பாகுபாடின்றி உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் தனித்தனியே களம் காணும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
340 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புரவாஞ்சல் எக்ஸ்பிரஸ் பாதையை திறந்து வைத்து அவர் பேசியதாவது-
அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை அடிப்படை கொள்கையாக வைத்து உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுகிறது. இங்கு சாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை.
முன்பு உத்தரப்பிரதேசத்தை ஆண்ட கட்சிகள் மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தின. குறிப்பாக சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால், மாநிலத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க முடியாமல் போனது.
வாக்கு வங்கி குறைந்து விடும் என்ற காரணத்தால் எனது அருகில் நிற்பதைக் கூட சில தலைவர்கள் தவிர்த்தனர். உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதற்கு எந்த நிகழ்வும் கிடையாது. யோகி ஆதித்யநாத் முன்பு எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துள்ள. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர்கள் நாளும் ஒரு அறிக்கையை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்இவ்வாறு அவர் கூறினார்.