இன்னுமா துயில்கிறாய் எம்முயிர்த் தாயே வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயோ? கே.சுப்பராயன் MP விடுத்துள்ள குடியரசு தின செய்தி
கே.சுப்பராயன் MP முகநூல் பதிவில் இருந்து…
‘குடி அரசு’ என்ற சொல்லின் மெய்ப்பொருளை ‘குடிகள்’ உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை! தெரிந்திருந்தால், குடிகெடுப்பதையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட கொடியவர்களை, அதிகாரத்தில் அமர்த்தி இருக்கவே மாட்டார்கள்!
குடிமக்கள் குடியரசின் உள்ளடக்கத்தை உணர்ந்து கொள்ளாமல் தடுத்ததில், தடுத்துக்கொண்டிருப்பதில் தேசியப் போர்வைக்குள்ளும், வெளியிலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற நச்சரவங்களே முழுமுதற்காரணமாவார்கள்!
குடியரசின் எதிரிகளை மக்களுக்கு இனம் காட்டுவதில் நாடு வெற்றி பெறவில்லை!குடியரசின் எதிரிகளை இனம் காண்பதில் மக்களும் வெற்றி பெறவில்லை!ஆட்சியாளர்களின் கரங்களில் அதிகாரம் என்கிற கொலைவாள்!
குடியரசோ படுகளத்தில் படுகாயத்துடன் பதறிக்கிடக்கிறது! இன்னுமா துயில்கிறாய் எம்முயிர்த் தாயே வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயோ?